Sunday 30 July 2017

Tnpl tamil|brittle speech

தமிழ்நாடு பிரிமியர் லீக் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகச்சிறந்த தளமாக அமையும் என பிரெட் லீ கூறியுள்ளார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் சென்னை, நெல்லை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. போட்டிகள் நடைபெறாத பெரிய நகரங்களான திருச்சி, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் பிரமாண்ட திரை மூலம் டி.என்.பி.எல். போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி வாரியர்ஸ் அணிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசிக்க உள்ளார்.
டி.என்.பி.எல். டி20 லீக் கிரிக்கெட் தொடர் குறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘டி.என்.பி.எல். போட்டி இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு நல்ல தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.
20 ஓவர் ஆட்டங்களை எதிர்கொண்டு தற்போதைய பேட்ஸ்மேன்கள் நன்றாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி துரதிர்ஷ்டவசமாக தோற்றுவிட்டது. ஆனாலும் ஜூலன் கோஸ்வாமி மிகச்சிறப்பாக பந்து வீசினார். அது பெருமையாக உள்ளது. உமேஷ் யாதவ் மற்றும் முகமது ‌ஷமி ஆகியோர் எதிர்காலத்தில் சிறப்பாக விளங்குவார்கள்’’ என்றார்.

No comments:

Post a Comment

SIMPLEPAY APP PRIVACY POLICY

Privacy Policy  Simple pay team built the Simple pay app as a Free app. This SERVICE is provided by Simple pay team at no cost and is intend...