Tuesday 1 August 2017

The love story|மீண்டும் ஒரு காதல் கதை

அஸ்வின் பொறியியல்  கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவன் .நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் .நர்மதா அவனது காதலி.இவர்களின் காதல் கல்லூரி முழுவதும் பரவலாக தெரிந்த விஷயம்.அஸ்வின் தனது வாழ்க்கையே நர்மதா என்று இருந்தான் .அன்று கல்லூரியில் இறுதி த்தேர்வு அனைத்து மாணவர்களும் நண்பர்கள் ,மற்றும் ஆசிரியர்களை பிரிவதை எண்ணி வருந்திக்கொண்டு இருந்தனர் .அஸ்வின் மட்டும் கல்லூரியில் நர்மதாவை வழக்கமாக  சந்திக்கும் அதே நாற்காலியில் அமர்ந்திருந்தான் .நர்மதா காத்திருக்க சொல்லியிருந்தாள்.அஸ்வின் நர்மதா தங்களுடைய கல்யாணம் பற்றி முடிவுசெய்ய வரச்சொல்லிருப்பாள் என்று ஆர்வமாய் காத்திருந்தான்.பின்னால் தனது தேவதை வருவதைக்கண்டான்.அஸ்வின் அருகில் அமர்ந்தாள்.அவளிடம் இருக்கும் அந்த மலர்ச்சி இன்று இல்லை என்பதை நன்கு உணர்ந்தான் .அதனால் இவனும் மௌனமாக இருந்தான் .சின்ன அமைதிக்கு பிறகு தனது நோட்புக் கீழிருந்து ஒரு கவரை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.அதை படித்த அஸ்வின் அதிர்ந்தான் .நர்மதாவிடம் திரும்பி "நான் இருக்கும் போது ஏன் வருத்தபட்ற பத்திரிகை தானே அடிச்சிருக்காங்க நாளைக்கே நமக்கு கல்யாணம் நம்ம பிரண்ட்ஸ் முன்னாடி தைரியமா இரு"என்று சமாதானப்படுத்தினான்.நர்மதா எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தாள் .பின்பு அவளே பேசினாள் "என்ன ஆறு மாசத்துக்கு முன்னாடியே பொண்ணுபார்த்து முடிவு பண்ணிட்டாங்க.படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணலாம்னு இருந்தாங்க  "ஒன்றும் புரியாமல் அஸ்வின் நர்மதாவின் கண்களையே பார்த்தான் .அதற்கு அவள்"ஆமா அஸ்வின் இனி நம்ம எதிர்க்காலத்த பத்தி யோசிக்கனும் இனி நீ வேலை தேடி சம்பாதிச்சு உங்க  அக்காவ கல்யாணம் பண்ணிக்கொடுத்து சொந்தமா  வீடு கட்டி நம்ம இரண்டு வீட்டுலயும் சம்மதம் வாங்கி எப்ப நடக்கும் இதேல்லாம்.சாகவரைக்கும் இந்த தவணை முறை வாழ்க்கை எனக்கு வேண்டாம் .எனக்கு பாத்திருக்கிற மாப்பிள்ளை துபாய்ல இன்ஜினியர் நல்ல சம்பளம் நல்ல லைப் எனக்கு இதுதான் சரின்னுபடுது.என்ன உனக்கு புடிக்கும்னா   என்ன எனக்கு புடிச்ச  மாதிரி  வாழவிடு ப்ளீஸ்"பேசி முடித்த அடுத்த நிமிடமே அஸ்வினை விட்டு  வேகமாக கடந்து சென்றாள்  திரும்பிக்கூட பார்க்காமல் .அங்கே இதயம் ஒன்று கண்ணாடியில் வரைந்த  ஒவியமாய் உடைந்து சிதறியதை அறியாமல் (நான்கு ஆண்டுகளுக்கு பிறகு )நர்மதா தனது கணவன் மூன்று வயது ஆண் குழந்தையுடன் தங்கையின் திருமணத்திற்கு சென்னைக்கு வந்தாள் .நர்மதாவின் குடும்பமே திட்டினார்கள்"சொந்த தங்கச்சி கல்யாணம் கல்யாணத்துக்கு முதல் நாள் வர்றியேம்மா"கணவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்று சொல்லி சமாளித்தாள்.இரவு மாப்பிள்ளையை மண்டபத்துக்கு அழைத்து வரும்போது நர்மதா கவனித்தாள்.அஸ்வின் தான் மாப்பிள்ளை என்றதும்  ஒன்றுமே புரியாமல் திகைத்து போய் நின்றாள் .இரவு 12 மணியளவில் நர்மதா மண்டபத்தின் மாடியில் தனியாக நின்றிருந்தாள்.அப்போது அவளின் பின்னால் யாரோ நிற்பதை அறிந்து திரும்ப அஸ்வின் நிற்பதை கவனித்தாள் .அஸ்வின் நர்மதா அருகில் வந்து"என்ன குழப்பமா இருக்கா நர்மதா .என்கிட்ட எது இல்லைன்னு நீ சொன்னியோ நான் அதை  அடைய எனக்கு மூணு வருஷம் தான் ஆச்சு .உன் புருஷனவிட இப்ப நான் தான் பெஸ்ட்.அத நீ பாக்கனும் .உன் வாழ்நாள் முழுவதும் நீ பாத்துட்டே இருக்கணும் .நீ உடைச்ச ஒரு இதயத்தோட துடிப்ப  நீ உணரனும் .அதுக்கு தான் உன் தங்கச்சிய கல்யாணம் பண்ண முடிவெடுத்தேன்.உன் தங்கச்சிய நான் தேவதை மாதிரி வச்சி வாழ்றத நீ பாத்து வருந்தனும்.காதல்ல வேணா நான் தோத்திருக்காலம்.ஆனா வாழ்க்கையில் நான் தான் வின்னர்னு உனக்கு இனி தான் புரியப்போகுது .உனக்கு மட்டுமல்ல  நேர்மையான காதல  தூக்கி வீசுற எல்லோருக்கும்  இனிமேல் இப்படித்தான் கிளைமேக்ஸ்"அவனது சிரிப்பில் நர்மதா நொருங்கினாள்.      

                      நன்றி வணக்கம்

No comments:

Post a Comment

SIMPLEPAY APP PRIVACY POLICY

Privacy Policy  Simple pay team built the Simple pay app as a Free app. This SERVICE is provided by Simple pay team at no cost and is intend...